சமூக ஊடகத்தில் வதந்தி பரப்பிய கனேடியர்: அரை லட்சம் டொலர்கள் அபராதம் விதித்த நீதிமன்றம்!

Report Print Balamanuvelan in கனடா

கனேடியர் ஒருவர் சமூக ஊடகத்தில் வதந்தி பரப்பியதற்காக, அவருக்கு அரை லட்சம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரொரன்றோவைச் சேர்ந்த Wu Jian என்பவர், Simon Zhong Xinsheng என்னும் சமுதாய தலைவரைக் குறித்து பல வதந்திகளை வாட்ஸ் ஆப்புக்கு இணையான கனேடிய சமூக ஊடகமான வீ சாட்டில் பரப்பியுள்ளார்.

Simon பணம் கையாடல் செய்பவர் என்றும், தனது மனைவிக்கு துரோகம் செய்கிறார் என்றும் பல வதந்திகளை பரப்பியுள்ளார் அவர்.

அதற்காக Wuமீது Simon வழக்கு தொடர்ந்ததோடு, அவர் வெளியிட்ட செய்திகளை நீக்கவேண்டும் என்று கோர, செய்திகளை அகற்றுவதற்கு பதிலாக, Simon தன்னை மிரட்டியதாக மீண்டும் புதிய வதந்திகளைப் பரப்பியுள்ளார்.

வதந்திகள் குறித்து விசாரித்த நீதிமன்றம், Simon குறித்து பரப்பப்பட்ட எந்த செய்திகளிலும் உண்மையில்லை என்பதை கண்டறிந்துள்ளது.

எனவே, Simonக்கு அரை லட்சம் டொலர்கள் இழப்பீடு வழங்குமாறு Wuக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இனி Simon குறித்து எந்த செய்திகளையும் இணையத்திலும் வேறெந்த வகையிலும் வெளியிடக்கூடாது என்று Wuக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Simon Zhong Xinsheng (photo credit :National Congress of Chinese Canadians)

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers