கனடாவிற்கு புதிய வாழ்க்கையை தேடி சென்ற இஸ்லாமிய பெண் இப்போது எப்படி இருக்கிறார்? அவரே வெளியிட்ட புகைப்படம்

Report Print Santhan in கனடா

சவுதி அரேபியாவில் இருந்து தப்பி கனடாவிற்கு புதிய வாழ்க்கை தேடி வந்த பெண் ஒருவர், தன்னுடைய பழைய படம் மற்றும் பிகினியில் இருக்கும் புதிய புகைப்படத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்திருந்ததால், அவரை சிலர் மிகவும் மோசகாம தாக்கி பேசியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் Rahaf Mohammed al-Qunun என்ற பெண், சவுதி அரேபியாவில் தன்னுடைய குடும்பத்தை விட்டு தப்பி வெளிநாட்டிற்கு ஓடி வந்தார்.

ஏனெனில் அவர் உடல், உணர்ச்சி, வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் பல மாதங்களுக்குள் வீட்டிற்குள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், சவுதியில் என்னைக் கொன்று என் கல்வியைத் தொடரவிடாமல் தடுப்பதாக அச்சுறுத்தாகவும், நான் ஒடுக்கப்பட்டேன். நான் வாழ்க்கையையும் வேலையையும் நேசிக்கிறேன், நான் மிகவும் லட்சியமாக இருக்கிறேன், ஆனால் என் குடும்பம் என்னை வாழ்வதைத் தடுக்கிறது.

இதன் காரணமாக குவைத்திலிருந்து, தாய்லாந்தின் பாங்காங்கிற்கு பறந்தார். ஆனால் குடிவரவு அதிகாரிகள், அவருக்கு அனுமதி மறுத்தனர். அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனால் மிகுந்த வேதனையடைந்த அவர் அது குறித்து வீடியோ ஒன்றை சமூகவலைத்தள பக்கத்தில் #SaveRahaf என்று குறிப்பிட்டு, நான் இஸ்லாமியர் இல்லை, நாத்திகர் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, அவருக்கு ஆதரவு அதிகமானது, இதையடுத்து அவருக்கு ஐ.நா பாதுகாப்பு வழங்க முடிவு செய்தது, அதன் பின் அவர் கனடாவிற்கு தன்னுடைய புதிய வாழ்க்கையை தேடி சென்றார். அங்கு அவருக்கு ஆதரவு பெருகியது.

இதன் காரணமாக அவர் சமூகவலைத்தள பக்கத்தில், என்னை ஆதரித்து என் உயிரைக் காப்பாற்றிய மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உண்மையிலேயே நான் இந்த அன்பையும் ஆதரவையும் கனவு கண்டதில்லை. நீங்கள் ஒரு சிறந்த மனிதராக என்னைத் தூண்டும் தீப்பொறி என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த மாதம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஹிஜாப் அணிந்திருந்த பழைய புகைப்படத்தையும், இப்போது பிகினி அணிந்திருந்த புதிய புகைப்படத்தையும் பதிவிட்டு, இது என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம், கறுப்பு உடைகளை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருந்து ஆண்களால் கட்டுப்படுத்தப்படுவதிலிருந்து ஒரு சுதந்திர பெண்ணாக இருப்பது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்ட சவுதி அரேபியாவை சேர்ந்த சிலர் இவர் தன்னைத் தானே நிர்வாணமாக்குகிறார் என்று தாக்கி கமெண்ட் செய்துள்ளனர், அதுமட்டுமின்றி, இன்னும் சிலரும், இப்போது அங்கிருக்கும் பெண்கள் தங்களுடைய சாதரண வாழ்க்கையை வாழ்கின்றனர்.

ஷாப்பிங் மால்களுக்கு செல்கின்றானர், தனியாக பயணம் செய்கின்றனர், ஆண்களும், பெண்களும் சமம் என்றளவிற்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் புதிய அரசர் முஹம்மது பின் சல்மான் பெண்கள் விஷயத்தில் பல மாற்றங்கள் கொண்டு வந்ததாகவும், பெண்கள் தற்போது இங்கு சுதந்திரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers