வீட்டை சுத்தம் செய்த போது கிடைத்த அதிர்ஷ்டம்! கோடீஸ்வரனாக மாறிய கனடியர்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் லொட்டரி டிக்கெட் வாங்கியதை மறந்த நபரின் கையில் திடீரென டிக்கெட் கிடைத்த நிலையில் அதில் விழுந்த பரிசின் மூலம் கோடீஸ்வரராகியுள்ளார்.

கனடாவில் வடக்கு அல்பர்டாவை சேர்ந்தவர் பெர்னார்ட் மைஸ்னுவி.

இவர் கடந்த மாதம் நான்காம் திகதி லொட்டரி சீட்டுகள் வாங்கினார். பின்னர் அதை பற்றி மறந்து போன அவர் தனது வேலையில் மூழ்கினார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்துள்ளார் பெர்னார்ட்.

அப்போது ஒரு சிறிய பையில் லொட்டரி சீட்டுகள் இருப்பதை பார்த்த பெர்னார்ட் அது தான் வாங்கிய லொட்டரி சீட்டுகள் என உணர்ந்தார்.

இதையடுத்து அதன் எண்களை வைத்து சோதனை செய்த போது அதற்கு $331,763.60 பரிசுகள் விழுந்ததை கண்டுபிடித்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார் பெர்னார்ட்.

இது குறித்து பெர்னார்ட் கூறுகையில், ஒன்றுக்கு நான்கு முறை எனக்கு பரிசு விழுந்ததா என சோதனை செய்து உறுதி செய்து கொண்டேன்.

ஆனால் எனக்கு இவ்வளவு பெரிய பரிசு விழுந்ததை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers