தன்னை விட இளைய காதலனுக்காக வீட்டையே விற்ற கனேடிய பெண்: குப்பை மேட்டில் சூட்கேசுக்குள் பிணமாக கண்டுபிடிப்பு!

Report Print Balamanuvelan in கனடா

தன்னை விட 13 வயது குறைவான காதலனுக்காக வீட்டை விற்று விட்டு கியூபா சென்று குடியேற முடிவு செய்த கனேடிய பெண் ஒருவர், குப்பை மேட்டில் வீசப்பட்ட சூட்கேஸ் ஒன்றிற்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொன்றியலைச் சேர்ந்த Nathalie Fraser (52), தனது காதலரான Leonel Leon Nuviola (39) என்பவருடன் வாழ்வதற்காக கனடாவிலிருந்த தனது வீட்டை விற்றுவிட்டு கியூபாவுக்கு குடிபெயர்ந்தார்.

இந்நிலையில், Nathalieயைக் குறித்து எந்த தகவலும் இல்லை என அவரது குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் அவரைத் தேடியபோது, கியூபா நகரமான Matanzasஇல், சூட்கேஸ் ஒன்றிற்குள் வைக்கப்பட்டு, குப்பை மேடு ஒன்றில் அவரது உடல் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மோசமாக தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருந்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அவரது காதலரான Leonel கைது செய்யப்பட்டுள்ளார்.

Nathalie எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதை அறிவதற்காக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers