சாலையில் கத்தை கத்தையாக கிடந்த பணம்! அதை எடுத்த 17 வயது இளம்பெண் செய்த செயல்... குவிந்த பாராட்டு

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சாலையில் கிடந்த பையில் கத்தை கத்தையாக கிடைத்த பணத்தை 17 வயது டீன் ஏஜ் பெண் பொலிசில் ஒப்படைத்ததற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.

ஒன்றாறியோ மாகாணத்தின் மில்டன் நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண் நேற்று முன் தினம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கீழே ஒரு பை கிடப்பதை பார்த்த அவர் அதை திறந்த போது உள்ளே வங்கி ஆவணங்கள் மற்றும் கத்தை கத்தையாக பணம் இருந்தது.

இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு அதை எடுத்து கொண்டு போய் ஒப்படைத்தார்.

பொலிசார் இது குறித்து நடத்திய விசாரணையில், அந்த பையில் இருந்த பணத்தை தொழில் விடயத்துக்காக எடுத்து செல்லப்பட்ட போது ஊழியர் ஒருவர் கவனக்குறைவால் தவறவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட உரிமையாளரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து இளம்பெண்ணை பாராட்டிய பொலிசார் கூறுகையில், இந்த நேர்மையான செயலுக்கு பாராட்டுகள்,

இது சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்களின் நல்ல மனதை அப்படியே பிரதிபலிக்கிறது என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers