கனடாவில் குடியேறும் மற்றொரு ராஜ குடும்பம்?: ராஜ குடும்பத்தில் மற்றொரு விவாகரத்து!

Report Print Balamanuvelan in கனடா

கடந்த ஆண்டு கரடு முரடாக இருந்ததாக தனது கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்திருந்த பிரித்தானிய மகாராணியாருக்கு, இந்த ஆண்டு தனது செல்லப்பேரனின் விவாகரத்து மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

மகாராணியாரின் செல்ல மகள் இளவரசி ஆனின் மகன் இளவரசர் பீற்றர் பிலிப்ஸ் (42).

சமீபத்தில் சீன தொலைக்காட்சி ஒன்றில், பால் விளம்பரம் ஒன்றில் நடித்ததால் சர்ச்சையில் சிக்கினார் அவர். ஆனால், உண்மையில் அவர் மக்களின் வரிப்பணத்தில் வாழவில்லை.

எனவே அவர் தனது வருவாய்க்காக பல்வேறு வகையில் வேலை செய்து வருகிறார். அவற்றில் மற்றொன்று தங்கள் திருமண புகைப்படங்களை பிரபல பத்திரிகை ஒன்றிற்கு விற்று பணம் பார்த்தது, அதற்காகவும் அவர் மீது விமர்சனம் வந்தது உண்டு. இந்நிலையில், திடீரென அவரது மனைவியான ஆட்டம் பிலிப்ஸ் (Autumn Phillips) (41) விவாகரத்து கோரியுள்ளார்.

இந்த விடயம் மகாராணியாருக்கு மட்டுமல்ல, பீற்றருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

என்ன காரணத்திற்காக ஆட்டம் பிலிப்ஸ் விவாகரத்து கோரியுள்ளார் என்பது தெரியவில்லை.

இதற்கிடையில், விவாகரத்துக்குப்பின் ஆட்டம் பிலிப்ஸ் தனது பிள்ளைகளுடன் கனடாவில் சென்று குடியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஹரி மேகன் கனடா சென்றுள்ளது ஒரு காரணம் என்று கூறப்பட்டாலும், மற்றொரு முக்கிய காரணமும் உண்டு.

அது ஆட்டம் பிலிப்ஸ் மற்றும் அவரது பிள்ளைகள் கனேடிய குடியுரிமை கொண்டவர்கள் என்பது.

ஆட்டம் பிலிப்ஸ் கனடா நாட்டைச் சேர்ந்தவர், அவர் மொன்றியலில் பிறந்தவர்தான். கனடா வந்திருந்த பீற்றரை, அவர் ராஜ குடும்பத்தவர் என்று தெரியாமலே காதலித்தவர் ஆட்டம் பிலிப்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

12 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப்பின், திடீரென அவர் விவாகரத்து கோரியுள்ளதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers