சொகுசு கப்பலில் அதிகரிக்கும் பதற்றம்..! பாதிக்கப்பட்ட கனேடியர்களை அங்கேயே விட்டுவிடுவோம்! கனடா அரசு முக்கிய அறிவிப்பு

Report Print Basu in கனடா

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கியிருக்கும் கனேடியர்களை திரும்ப அழைத்து வர விமானம் அனுப்பப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது.

ஜப்பானின் யோகஹாமா துறைமுகத்தில் கடந்த வாரத்திலிருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசுக் கப்பலில் இருந்து சிலா் வெளியேற அந்த நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அனுமதித்தது.

குறித்த கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஜப்பானில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 407 ஆக உயர்ந்துள்ளது.

டயமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் சிக்கியிருக்கும் கனேடியர்களை அழைத்து வர விமானம் அனுப்பப்படும் என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளை வெளிப்படுத்தும் கனேடிய பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள், அதற்கு பதிலாக ஜப்பானிய சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகுந்த சிகிச்சை பெறுவார்கள் என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடாவுக்கு வந்த பிறகு, பயணிகள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்