பனிமூட்டமான குன்றில் சிக்கி பாறையை பிடித்துக்கொண்டே 2 மணிநேரமாக போராடிய வீரர்!

Report Print Vijay Amburore in கனடா

கனடாவில் ஒரு பனிமூட்டமான குன்றின் மீது சிக்கிக்கொண்ட பனிச்சறுக்கு வீரர், 2 மணி நேரமாக பாறையை பிடித்துக்கொண்டு போராடியுள்ளார்.

கனடாவின் விஸ்லர் ரிசார்ட்டில் உள்ள கோர் ஸ்னோபோர்டு முகாம்களின் பனிச்சறுக்கு பயிற்சியாளரான ஆலிவர் ராய், இரண்டு வாரங்களுக்கு முன் நடத்த சம்பவத்தின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஒரு பனிச்சறுக்கு வீரர் பனிமூட்டமான மலையின் குன்றில் சிக்கிக்கொண்டு ஒரு பாறையை நெருங்கி பிடித்தபடியே நின்றுகொண்டிருக்கிறார்.

ஆலிவர் ராய் அந்த பதிவில், சில வாரங்களுக்கு முன்பு நான் பயிற்சி கொடுக்கும் குழுவுடன் பிளாக்பாம்பில் உள்ள ஸ்பான்கி பகுதிக்கு வந்த போது ஒரு குழப்பமான காட்சியை கண்டேன்.

ஒரு இளைஞர் மோசமான குன்றின் பாதியில் சிக்கிக்கொண்டிருந்தார். யாராவது அவரை நெருங்கி சென்று காப்பாற்ற முற்படுவார்கள் என நாங்கள் பெரும் கவலையுடன் இருந்தோம்.

View this post on Instagram

Here's the better, original footage of the guy stuck on a cliff I filmed a couple of weeks ago. I was coming out of the Spanky's Ladder zone on Blackcomb with the groupe I'm coaching, when we saw a bit of commotion and, eventually, this poor guy perched halfway up a nasty cliff with no way up or down. I had with me the camp video camera, so I was able to get a few good close-ups of him hanging on for his life. As comical as it was that anyone would keep going and get themself into such a bad spot, we where also all very worried for him. Shortly after, 6-7 patrollers started showing up with lots of ropes, but we had to leave before we could see the actual rescue. I heard that after 1-2 hours they managed to get him out of there. He was seen later having a beer with his buddy at the GLC. He's alright! Live commentating by @adventures_of_megs #corecamps #rescue #cliff #rescue #cliffrescue #snowboard #blackcomb #spankysladder #brownpants #dontmove #wrongway #chill #funnynotfunny #boardtube #failarmy #jerryoftheday #failsvids

A post shared by Olivier Roy (@olivierartnsnow) on

சிறிது நேரத்திற்கு பிறகு 6-7 ரோந்து வீரர்கள் ஏராளமான கயிறுகளை கட்டத்தொடங்கினர். ஆனால் உண்மையான மீட்பைக் காண்பதற்கு முன்பு நாங்கள் வெளியேற வேண்டியிருந்தது. 1-2 மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்ற முடிந்தது என்று கேள்விப்பட்டேன்.

பின்னர் அவர் நன்றாக இருந்ததையும் நேரில் காண முடிந்தது என பதிவிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்