கனடாவில் வீட்டுக்குள் புகைப்பிடித்ததால் தீயில் கருகி உயிரிழந்த நபர்: வெளியான அவர் புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் புகைப்பிடித்த போது அதன் நெருப்பு வீடு முழுவதும் பரவியதில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வான்கூவர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் Ward Woodfall (55) என்ற நபர் வசித்து வந்தார்.

அந்த வீடு திடீரென தீப்பிடித்து எரிவதாக வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 8 மணிக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு அவர்கள் வந்த போது வீட்டுக்குள் சிக்கியிருந்த ஊனமுற்றவரான Ward Woodfall தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் Ward Woodfall புகைப்பிடித்த போது ஏற்பட்ட நெருப்பு வீடு முழுவதும் பரவியதாலேயே இவ்விபத்து நடந்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Submitted

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்