கனடாவில் தீயில் முழுவதுமாக எரிந்த வீடு! தனியாக உள்ளே சிக்கி கொண்டு உயிரிழந்த சிறுவன்

Report Print Raju Raju in கனடா
175Shares

கனடாவில் வீடு தீப்பிடித்து முழுவதுமாக எரிந்ததில் உள்ளிருந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

manitoba மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலை 3 மணிக்கு தீப்பிடித்தது.

வீட்டுக்குள் இருந்த ஒருவர் இதை பார்த்து மற்றவர்களிடம் கூற அங்கிருந்த அனைவரும் பதறியடித்தப்படி வெளியில் ஓடி வந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறைனர் அங்கு வந்த போது வீடு முழுவதும் எரிந்திருந்தது.

வீட்டிலிருந்து மூன்று பெரியவர்கள், மூன்று சிறியவர்கள் வெளியேறி தப்பித்த நிலையில் உள்ளிருந்த ஏழு வயது சிறுவனால் வெளியில் வரமுடியவில்லை.

தீ பெரியளவில் பரவி புகை அதிகம் வெளியேறியதால் உள்ளே மாட்டி கொண்ட சிறுவனையும் உடனடியாக சென்று மீட்க முடியவில்லை.

பின்னர் சில மணி நேரம் கழித்து அந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

தீயணைப்பு துறையின் உயர் அதிகாரிகளும், பொலிசாரும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்