கனேடியர்கள் ஹரி மேகனின் பாதுகாப்பு செலவை ஏற்க மறுப்பதற்கான காரணம் இதுதான்: உண்மையை போட்டு உடைத்த நபர்! 

Report Print Balamanuvelan in கனடா

கனேடியர்கள் ஹரி மேகனின் பாதுகாப்பு செலவை ஏற்க மறுப்பதற்கான உண்மையான காரணத்தை போட்டு உடைத்துள்ளார் Canadian Taxpayers Federation என்ற அமைப்பின் இயக்குநர்.

ராஜ பொறுப்புக்களைத் துறந்து சொந்தக்காலில் நிற்கப்போவதாகக் கூறி பிரித்தானிய இளவரசர் ஹரி தன் மனைவி மற்றும் மகனுடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். அப்போது, அவர்களுக்கான பாதுகாப்புச் செலவான, ஆண்டொன்றிற்கு 20 மில்லியன் பவுண்டுகள் சுமையை யார் ஏற்பது என்ற கேள்வி எழுந்தது.

பொதுமக்கள் தங்கள் வரிப்பணம் ஹரி, மேகன் குடும்பத்தின் செலவுக்காக செலவிடப்படப்போவதை அறிந்து கடுங்கோபம் அடைந்தார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான மனு ஒன்றை Canadian Taxpayers Federation (CTF) என்ற அமைப்பு உருவாக்க, அதில் சில வாரங்களுக்குள்ளேயே 100,000 பேர் கையெழுத்திட்டனர்.

இதற்கிடையில், ஏன் மக்கள் ஹரி, மேகன் குடும்பத்துக்கான பாதுகாப்பு செலவை தங்கள் மீது சுமத்துவது குறித்து அவ்வளவு கோபமடைந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் CTF அமைப்பின் பெடரல் இயக்குநரான Aaron Wudrick. ராஜ குடும்ப தம்பதிகளாக ஹரியும் மேகனும் கனடாவுக்கு வருகை புரிந்தால், அவர்களது வருகைக்காக செலவு செய்வதில் நியாயம் இருக்கிறது.

ஆனால், அவர்கள் பணக்கார பிரபலங்களாக, ஹாலிவுட் நடிகர்களைப்போல, கனடாவுக்கு வர விரும்பினால் அதற்கான செலவை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. அதாவது, ஹரியும் மேகனும், ராஜ குடும்ப பொறுப்புகளை உதறியதை கனேடிய மக்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லையாம்.

ராஜ குடும்பத்தினராக தாங்கள் நிறைவேற்றவேண்டிய பொறுப்புகளை உதறிவிட்டு, பிரித்தானிய வாழ்விலிருந்து தப்புவதற்காக அவர்கள் கனடாவுக்கு வந்துள்ளதாக எண்ணுகிறார்களாம் மக்கள்.

அப்படி பொறுப்புகளை நிறைவேற்ற விரும்பாதவர்களுக்காக கனேடியர்கள் செலவு செய்யவேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி என்கிறார்கள் மக்கள். அதனால்தான் அவர்களுக்கெதிராக அந்த மனுவை உருவாக்கினோம் என்கிறார் Wudrick.

ஒரு சராசரி கனேடிய குடிமகன், நான் எனக்காக செலவுகளை செய்கிறேன், எனக்காக வரி கட்டுகிறேன், இந்த பணக்காரர்கள் என் நாட்டுக்கு வருகிறார்கள், நான் ஏன் அவர்களுக்காக செலவு செய்யவேண்டும் என்று எண்ணுவதாக தெரிவிக்கிறார் அவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்