நான் இதில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்... கொரோனா குறித்து கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Santhan in கனடா

கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ கனேடிய மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும், எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார்.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸால் கனடாவில் மட்டும் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு கனடா முயற்சித்து வரும் நிலையில், பிரதமரின் மனைவியான Sophie Gregoire-வுக்கு கொரோனா உறுதியானதால், அந்நாட்டு மக்களிடையே இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, கனேடிய மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும், எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அதில், நேற்று நான் என்னுடைய மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பற்றி கூறினேன். அதில் அவளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Sophie Gregoire-வுக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் இருக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையை கேட்டு வருகின்றோம். இதன் காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் இந்த நோயினால் பாதுகாப்பு முக்கியம், அதை நல்ல முறையில் கையாண்டு வருகிறோம். கனடேடிய மருத்துவ அதிகாரிகள் உறுதியாக இருக்கின்றனர்.

என்னுடைய மருத்துவர் என்னை 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இதில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை, நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் என்னால் வீட்டில் இருந்து வேலைகள் அனைத்தையும் பார்க்க முடியும். இது கொஞ்சம் அசெளவுகரியமானது தான் இருப்பினும், இது தான் சிறந்தது.

நாட்டில் மக்கள் மருத்துவ அதிகாரிகளின் அறிவுரைகளை கேளுங்கள், பாதுகாப்பாக இருங்கள். முக்கியமான நான் இப்போது கனடாவின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஏஜெனிசிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானிடம் கொரோனா வைரஸ் குறித்து விவாதித்தேன். இந்த விவாதம் வரும் நாட்களில் தொடர்ந்து நடக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் கொரோனா வைரஸால் உடல்நலம், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களைக் கட்டுப்படுத்தவும் தணிக்கவும் தேவையான வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இரு தலைவர்களும் தங்கள் குடிமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும் பொருளாதார பாதிப்புகளைத் தணிப்பதற்கும் அவர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

வைரஸுக்கு பதிலளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை அவை எடுத்துரைத்தனர்.

கொரோன வைரஸ் என்பது வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய சவாலாகும். கனடா மற்றும் உலகெங்கிலும் அதன் உடல்நலம், பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைக்க கனடா அரசு உள்ளூர், மாகாண, பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...