உடற்பயிற்சி செய்வதற்காக ஜிம்முக்கு சென்ற பெண்கள்: ஆபாச தளத்தில் வீடியோக்கள் வெளியானதால் புகார்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் உடற்பயிற்சி மையம் ஒன்றில் உடற்பயிற்சி செய்யச் சென்ற பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளம் ஒன்றில் வெளியானதையடுத்து பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி செய்யும் தங்களை, யாரோ தங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுப்பதாக ஹாமில்ட்டன் பொலிசாருக்கு பல புகார்கள் வந்துள்ளன.

பெண்கள் உடற்பயிற்சி செய்வதை ரகசியமாக வீடியோ எடுத்த நபர், அவற்றை ஆபாச இணையதளம் ஒன்றில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதே உடற்பயிற்சி மையத்தில் உறுப்பினராக இருந்த ஒருவர் அந்த வீடியோக்களை பதிவு செய்துள்ளதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு மட்டுமின்றி, கசினோ ஒன்றில் அவர் பணி செய்தபோதும் அந்த நபர் இதேபோல் வீடியோக்களை பதிவுசெய்துள்ளார்.

தற்போது அவர் அந்த கசினோவில் பணியாற்றவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ஒன்ராறியோவைச் சேர்ந்த Michael Viny Mikhail (27) என்ற அந்த நபர் மீது, அந்தரங்க புகைப்படங்களை பரப்பியது முதலான எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...