புலம்பெயர்ந்த 10 லட்சம் பேரை நிரந்தரமாக அனுமதிக்க கனடா முடிவு! வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தரமாகத் தங்க அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக கனடா அகதிகள் குடியேற்றம் மற்றும் குடியுரிமைத்துறை சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 2020ஆம் ஆண்டுக்குள்ளாக 3.41 லட்சம் பேர், 2021ஆம் ஆண்டில் 3.51 லட்சம் பேர், 2022ஆம் ஆண்டில் 3.61 லட்சம் பேர் என அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக மொத்தம் 10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தரமாகத் தங்க வைக்க திட்டமிட்டுள்ளோம்.

இதற்கான சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் துறை அமைச்சர் மார்கோ மெடிசினோ சார்பில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

இதனால் கனடாவில் நடுத்தர சமுதாயத்தின் கட்டமைப்பை பலப்படுத்த முடியும். கனடாவில் தொழில்துறை மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். உலகளவிலான மனிதகுல வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியேற்ற விதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

2019ஆம் ஆண்டில் மட்டும் 3.41 லட்சம் புலம்பெயர்ந்தோர் நிரந்தரமாகத் தங்க கனடா அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்