கனடாவில் மளிகைக்கடையில் திருடியதோடு சந்தேகத்துக்குரிய செயலில் ஈடுபட்ட 22 வயது பெண் கைது

Report Print Raju Raju in கனடா

கனடாவில் மளிகை கடையில் திருடியதோடு, ஊழியர்களை அடித்த புகாரில் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றாறியோ மாகாணத்தின் Timmins நகரில் உள்ள மளிகைக்கடைக்கு 22 வயதான Anya Larabie என்ற இளம்பெண் சென்றிருக்கிறார்.

அங்கு பொருட்களை திருடியதோடு, ஊழியரை ஆயுதம் கொண்டு Anya Larabie தாக்கியுள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இளம்பெண் Anya Larabie-வை பொலிசார் கைது செய்துள்ளனர். இதோடு அவர் சந்தேகத்திற்கிடமான செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது திருட்டு, ஆயுதங்களை கொண்டு தாக்கியது உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் Anya Larabie பொலிஸ் காவலில் உள்ள நிலையில் ஜாமீன் கோரும் நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக காத்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...