எது உண்மை என்றே தெரியவில்லை: கனடாவுக்கு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்!

Report Print Balamanuvelan in கனடா

கொரோனா அச்சம் காரணமாக, கனேடியர்கள் கனடாவுக்கு திரும்புங்கள் என்றார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆனால் எப்படி திரும்புவது என்று தெரியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

இலங்கையிலுள்ள சிறு கிராமம் ஒன்றில் இருக்கும் வின்னிபெக்கைச் சேர்ந்த ப்ராங்க்ளின் பெர்னாண்டோ என்பவர், எது உண்மை, எது கதை என்றே புரியவில்லை என்கிறார்.

கனடா அரசு, தான் கனடா வரலாம் என்று கூறிவிட்டது. ஆனால், விமான நிறுவனம் அடுத்த மாதம் வரை விமானம் எதுவும் இல்லை என்று கூறுகிறது.

இதில் எது நிஜம், எது கதை என்று புரியவில்லை என்கிறார் அவர். கனடா செல்லவேண்டும், அங்கு சென்று வேலை செய்யத் தொடங்கினால்தான் என் குடும்பத்துக்கு உதவமுடியும் என்கிறார் அவர்.

அவரைப் போலவே, பெரு போன்ற நாடுகளிலும் சில கனேடியர்கள் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.

Anna McKinnon, Grace McMorris மற்றும் Piper Larsen என்னும் மூன்று பெண்களும் சுற்றுலாவுக்காக பெருவுக்கு சென்றவர்கள், கனடா பிரதமரின் அழைப்பைக் கேட்டு கனடா புறப்பட தயாராகியிருக்கிறார்கள்.

ஆனால் நேரடி விமானம் கிடைக்காததால், அவர்களால் சரியான நேரத்துக்கு புறப்பட முடியவில்லை.

என்றாலும், எங்கோ ஒரு விமான நிலையத்தில் சிக்கி தவிப்பதைவிட, பெருவிலாவது பாதுகாப்பாக இருக்க முடிந்ததே அதுவே சந்தோஷம் என்கிறார்கள் அவர்கள்.

கனடா, அமெரிக்காவுடனான எல்லைகளை மூடுவது குறித்த பேச்சுவார்த்தைகள் குறித்த செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இவர்கள் எப்போது நாடு திரும்புவது என்ற நிலையற்ற எண்ணத்தால் தவிக்கிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்