கனடா-அமெரிக்கா இடையேயான எல்லை மூடல்.. போக்குவரத்து தடை! டிரம்ப் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in கனடா

கனடாவுடனான அமெரிக்காவின் வடக்கு எல்லையை மூடிவிட்டு, 'அத்தியாவசியமற்ற' போக்குவரத்து தடை செய்யப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

பரஸ்பர ஒப்புதலால், கனடாவுடனான நமது வடக்கு எல்லையை தற்காலிகமாக அத்தியாவசியமற்ற போக்குவரத்துக்கு மூடுவோம். வர்த்தகம் பாதிக்கப்படாது என டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

தடை எவ்வாறு செயல்படும், அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இடையே இரு நாடுகளுக்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பரஸ்பர தடை விதிக்கப்பட்ட விவரங்களை கனடாவும் அமெரிக்காவும் உருவாக்கிய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் வைரஸ் பரவுவதை தவிர்க்க கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன, ஆனால் முக்கியமான பொருளாதார உறவைத் தொடர ஆர்வமாக உள்ளன. கனடா அதன் 75 சதவீத ஏற்றுமதியில் அமெரிக்காவை நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்