கனடாவில் இருக்கும் பெற்றோருக்கு இதை நான் அனுப்புகிறேன்: கொரோனாவால் முகமூடிகளை அனுப்பும் மக்கள்

Report Print Santhan in கனடா

கொரோனா பீதி காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் முகமூடிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஹாங்காங்கில் இருக்கும் மகன் ஒருவர் கனடாவில் இருக்கும் பெற்றோருக்கு முகமூடி வாங்கி அனுப்பும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் மாறி வருகிறது. இந்த நோய் காரணமாக தற்போது வரை 245,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10,047 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, பிரித்தானியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியவாசியப் பொருட்களை அங்கிருக்கும் மக்கள் முன்பே வாங்கி வைத்து கொள்கின்றனர்.

அந்த வகையில், கொரோனாவிற்கு முதல் பாதுகாப்பே முகமூடி தான், அந்த முகமூடிக்கும் இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஹாங்காங்கில் இருக்கும் அதிரன் சான் என்பவர் , கனடாவில் இருக்கும் தன் பெற்றோருக்கு முகமூடிகளை வாங்கி, அதை கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறார்.

இது குறித்து அதிரன் சான் கூறுகையில், சீன புத்தாண்டின் காலகட்டத்தில் கனடாவில் இருந்து ஹொங்ஹொங்கிற்கு முகமூடிகள் அனுப்பினேன், இப்போது நான் கனடாவிற்கு அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது போன்று ஹொங்ஹொங்கில் இருக்கும் பலரும் வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு முகமூடிகளை அனுப்பி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்