புகலிடக் கோரிக்கையாளர்களையும் கைவிட முடியாது... கொரோனாவும் பரவக்கூடாது: கனேடிய நகரம் எடுத்துள்ள பாராட்டத்தக்க முடிவு!

Report Print Balamanuvelan in கனடா

என்னதான் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவுக்குள் நுழைவது அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.

சொல்லப்போனால், அமெரிக்காவில் கொரோனாவுக்கு அஞ்சி மக்கள் கனடாவுக்குள் நுழைகிறார்களா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து கனடாவின் கியூபெக்குக்குள் Roxham Road வழியாக நாளொன்றிற்கு 80 புகலிடக்கோரிக்கையாளர்கள் வரை நுழையத்தொடங்கியுள்ளார்கள். இது மேலும் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.

அதே நேரத்தில், புகலிடக்கோரிக்கையாளர்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளைக் கடந்து கனடாவுக்குள் நுழைவதால், ஒருவேளை அவர்கள் கொரோனாவை சுமந்து வர வாய்ப்புள்ளது.

ஆக, புகலிடக்கோரிக்கையாளர்களையும் கைவிட முடியாது, அதற்காக கனடாவுக்குள் கொரோனா பரவுவதையும் அனுமதிக்கமுடியாது.

எனவே, இந்த இரண்டு விடயங்களையும் சமாளிக்கும் வகையில் அரசின் திட்டத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளது ஒட்டாவா நகரம்.

அதன்படி, கனடாவுக்குள் Roxham Road வழியாக நுழைவோர், ஒட்டாவா நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெடரல் அரசின் செலவில், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளார்கள்.

அத்துடன், அவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கும் சுங்கத்துறை அதிகாரிகளின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

ஏனென்றால், அவர்கள்தான் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளார்கள்.

ஆகவே, அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு, நாட்டுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள் 14 நாட்களுக்கு ஒட்டாவாவில் தனிமைப்படுத்தப்பட உள்ளார்கள் என கனடாவின் துணை பிரதமரான Chrystia Freeland தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்