கொரோனா வைரஸ் ஒரு 'புரளி' ..! ஆயுதங்களுடன் சர்ச்சையை கிளப்பிய கனடா என்டிபி தலைவரின் மகன்

Report Print Basu in கனடா

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் என்டிபி தலைவர் ஆண்ட்ரியா ஹார்வத்தின் மகன் ஜூலியன் லியோனெட்டி கொரோனா வைரஸ் புரளி என தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு கனடாவில் 12 பேர் பலியாகியுள்ள நிலையில் 1,087 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், என்டிபி தலைவர் ஆண்ட்ரியா ஹார்வத்தின் மகன் ஜூலியன் லியோனெட்டி (27), தனது சமூக ஊடக பக்கத்தில் கொரோனா வைரஸ் ஒரு புரளி, விழிப்புடன் இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் லியோனெட்டி ஏஆர்-15 ரக துப்பாகியுடன் போஸ் கொடுத்துள்ளார். அவர் வைத்திருக்கும் துப்பாக்கி உண்மையானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளதால் சர்ச்சையாகியுள்ளது.

அதே போல் மற்றொரு படத்தில், தான் கழிப்பறை காகிதம் மற்றும் பிற பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை லியோனெட்டி வெளிப்படுத்தியுள்ளார்.

thepostmillennial

கழிப்பறை காகிதம் போன்ற அத்தியாவசிய பொருட்களை நாட்டு மக்கள் பதுக்க வேண்டாம் என மத்திய மற்றும் மாகாண அரசாங்கம் கனேடியர்களை கேட்டு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...