கொரோனா விஷயத்தில் மிகவும் அலட்சியம்! கனடாவில் இருந்து வந்த இளைஞனின் உண்மை முகம் அம்பலம்.. சிசிடிவி வீடியோ

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இருந்து இந்தியா திரும்பிய இளைஞர் தன்னை கொரோனா வைரஸ் தொடர்பாக விமான நிலையத்தில் யாரும் பரிசோதனை செய்யவில்லை என கூறி பரபரப்பை கிளப்பிய நிலையில் அவர் பொய் கூறியது ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.

அபிமன்யூ என்ற இளைஞன் டுவிட்டரில், ரொரன்ரோவில் இருந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையத்துக்கு 21ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு வந்தேன்.

அப்போது கொரோனா தொடர்பான எந்தவொரு பரிசோதனையும் எனக்கு செய்யப்படவில்லை, வெப்ப பரிசோதனை கூட செய்யப்படவில்லை.

இப்படி இருந்தால் எப்படி? இந்தியா கொரோனா விடயத்தில் மோசமான நிலைக்கு செல்லும் என கூறி அந்த பதிவை அகமதாபாத் விமான நிலையம் மற்றும் பிரதமருக்கு டேக் செய்தார்.

இந்த பதிவு பெரியளவில் வைரலானது.

ஆனால் அபிமன்யூ கூறியது அனைத்தும் பொய் என தெரிந்தது.

இது குறித்து அகமதாபாத் விமான நிலையத்தில் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், அபிமன்யூவுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்ட சிசிடிவி வீடியோவை வெளியிட்டு அவர் கூறியது பொய் என நிரூபிக்கப்பட்டது.

மேலும், சமுதாயத்துக்காக விமான நிலைய அதிகாரிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகின்றனர். உங்களின் இந்த பொய்யான அறிக்கை எங்களை புண்படுத்துகிறது.

தயவு செய்து பீதியை கிளப்பாமல் பொறுப்பான குடிமகனாக இருங்கள் என பதிவிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த அபிமன்யூ, என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு செய்யப்பட்ட பரிசோதனையை நான் கண் பரிசோதனை என நினைத்தேன் என கூறி சமாளித்தார்.

ஆனால் அபிமன்யூ வேண்டுமென்றே இவ்வாறு செய்தார் அவரை பலரும் திட்டி தீர்த்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்