தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் தவித்த நடிகை! விமானம் இல்லாததால் நேரலையில் பார்த்த பரிதாபம்

Report Print Raju Raju in கனடா

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஏற்படுத்தப்பட்ட பயண கட்டுபாடுகள் காரணமாக நடிகை ஒருவர் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாததால் வேதனை தெரிவித்துள்ளார்.

கனடாவை சேர்ந்தவர் Nia Vardalos. நடிகையான இவர் பணி விடயமாக அமெரிக்காவில் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி Niaவின் தந்தை Constantine Vardalos கனடாவில் உயிரிழந்தார்.

ஆனால் கொரோனா அச்சம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட பயண கட்டுபாடுகள் காரணமாக Nia-வால் அமெரிக்காவில் இருந்து உடனடியாக விமானத்தில் கனடாவுக்கு வரமுடியவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், நான் கடைசியாக என் தந்தையை கிறிஸ்துமஸ் தினத்தில் தான் பார்த்தேன், அப்போது தான் அவருக்கு உடல்நலத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

என் தந்தை கிரீஸ் நாட்டில் பிறந்த நிலையில் பின்னர் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

அவரின் இறுதிச்சடங்கை நேரலையின் மூலம் தான் பார்த்தேன்.

தந்தையாகவும், நண்பனாகவும் Constantine எனக்கு இருந்தார், அவர் எங்கள் நினைவில் எப்போதும் இருப்பார் என உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்