கனடாவில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல்! அது தொடர்பாக அதிகாரபூர்வ விளக்கம்

Report Print Raju Raju in கனடா

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும் அதை எதிர்க்கவும் கனடாவில் மருந்துகள் எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக கண்டுபிடிக்கபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கண்டுபிடிக்க சில நாடுகள் முழு வீச்சில் இறங்கியுள்ளது.

அமெரிக்கா கூட ஜெனிபர் என்ற பெண்ணுக்கு தாங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை செலுத்தி மருத்துவ பரிசோதனையை கடந்த வாரம் தொடங்கியது.

இந்த சூழலில் கொரோனாவை குணப்படுத்த கனடாவில் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக கனடா சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக விளக்கமளித்துள்ளது.

அதில், கொரோனாவை தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ எந்தவொரு மருந்து மற்றும் தயாரிப்புக்கும் நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.

அப்படி யாராவது மருந்து உள்ளது என கூறினால் அது பொய் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் அங்கீகரிக்கப்படாத மருந்துகளை விற்பனை செய்தல் கனடாவில் சட்டத்துக்கு புறம்பாணதாகும்.

இந்த விடயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், இதோடு இந்த செயலை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...