கொரோனா சிகிச்சை: அவசரம், இதை செய்யவேண்டாம்... கனேடிய மருத்துவர் ஒருவரின் எச்சரிக்கை செய்தி!

Report Print Balamanuvelan in கனடா

பொதுமக்கள் மலேரியாவுக்கான மருந்துகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தவேண்டாம் என்றும், இது அவசரம் என்பதால் உடனே பகிருமாறும் கனேடிய மருத்துவர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மலேரியா மருந்து கடவுள் கொடுத்த வரம் என்று கூறி அது கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனைக் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த மருந்திலுள்ள ரசாயனம் மீன் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படும் ஒரு பொருளிலும் இருப்பதை அறிந்து அதை உட்கொண்ட ஒருவர் பலியானார். அதேபோல் அந்த மருந்த உட்கொண்ட வேறு சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தும் பட்சத்தில், அது விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என கனேடிய மருந்தியல் நிபுணரான Dr. David Juurlink என்பவர் தெரிவித்துள்ளார்.

Barcroft Media/Getty Images

ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள Dr. David Juurlink, ஆய்வு ஒன்றில், 36 கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா மருந்தை கொடுத்து ஆராய்ந்தபோது, அதில் பல பெரிய பிரச்சினைகள் உள்ளது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதய துடிப்பில் பிரச்சினை, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மனோவியல் பிரச்சினைகள் ஆகிய பக்கவிளைவுகள் அந்த மருந்தால் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கனடாவின் தலைமை பொது சுகாதார அலுவலரான Dr. Theresa Tamம், அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்றும், அது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளதோடு, இத்தகைய மருந்துகள் மோசமான பக்க விளைவுகள் கொண்டவை என்றும் எச்சரித்துள்ளார்.

Blair Gable/Reuters

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...