கடைசி நிமிடங்களில் போராடிய தந்தை: அருகிலிருந்தும் கூட தொட முடியாமல் தவித்த மகள்

Report Print Vijay Amburore in கனடா

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த தந்தையை அருகிலிருந்து சிகிச்சையளித்து கூட இறுதிவரை தொட முடியவில்லை என அவருடைய மகள் வேதனை தெரிவித்துள்ளார்.

உகாண்டாவை பூர்விகமாக கொண்ட 77 வயதான முபாரக் போபாட் என்பவர், கனடாவின் டொரொன்டோவில் உள்ள லிட்டில் இந்தியா மளிகை கடையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

சமீபத்தில் பிரித்தானியாவில் உயிரிழந்த தனுது சகோதரியின் இறுதிச்சடங்கிற்கு சென்றுவிட்டு, மார்ச் 5ம் திகதி அன்று கனடா திரும்பியுள்ளார்.

நல்ல உடல்நிலையுடன் இருந்த அவருக்கு அடுத்த ஒரு வாரத்தில் திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து அவருடைய மகள் நூரீன் மான் மற்றும் அவரது மருமகன் ரிக் ஆகியோர் தாங்கள் வேலை செய்யும் மருத்துவமனையில் வைத்தே தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

ஆனால் நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்ததை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய மருமகன் ரிக், சொந்த தந்தையாக இருந்தாலும் கூட மற்ற நோயாளிகளை போலவே நூரீன் அவருடைய தந்தையை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருந்ததால், இறுதிவரை எங்களால் அவரை தொட்டு ஆறுதல்படுத்த முடியவில்லை. கடைசி நிமிடங்களில் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே நூரீன் அவருடைய தந்தையிடம் பரிமாறிக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்