கொஞ்சம் இரக்கம் காட்டுங்களேன்... உயிரிழந்த நான்கு பேரின் உடல்களுடன் கப்பலில் தவிக்கும் கனேடியர்கள்!

Report Print Balamanuvelan in கனடா

ஒரு பக்கம் ப்ளூ போன்ற தொற்று, உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள், மற்றொரு பக்கம் கொரோனா நோயாளிகள் என அச்சுறுத்தும் சூழலில் கப்பல் ஒன்றில் சிக்கித் தவிக்கிறார்கள் கனேடியர்கள் சிலர்.

கொடுத்த காசு வீணாகப்போகக் கூடாதென்று கப்பலில் சுற்றுலா புறப்பட்டுவிட்டு, இப்போது வீட்டுக்கு திரும்ப வழியில்லாமல் நடுக்கடலில் தவிக்கிறார்கள் 247 கனேடியர்கள்.

1,243 பேருடன் உலகம் சுற்ற புறப்பட்ட Zaandam என்ற சுற்றுலாக்கப்பல், தற்போது Nicaragua அருகில் நிற்கிறது.

ப்ளோரிடாவிலுள்ள Fort Lauderdale துறைமுகத்தில் மக்களை இறக்கலாமென்றால், ஏற்கனவே எங்கள் மாகாணத்தில் ஏகப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று, இதில் இவர்களை வேறு எங்கிருந்து ஏற்றுக்கொள்வது என்கிறார் ப்ளோரிடா கவர்னர் Ron DeSantis.

Submitted by Margaret Tilley

Broward பகுதியின் கமிஷனரான Michael Udineம், தங்கள் பகுதியிலேயே 1,000க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருப்பதால், இன்னொரு கப்பல் நிறைய இருக்கும் பயணிகளை கொண்டு இறக்குவது பிரச்சினையை அதிகரிக்கும் என்கிறார்.

கப்பலில் நோயுற்றவர்கள் இருப்பார்களென்றால், அவர்கள் எங்கே போவார்கள், எந்த மருத்துவமனை அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

Submitted by Cheryle Stothard

ஆனால், எப்படியாவது வீடு திரும்பிவிட மாட்டோமா என ஏங்கிக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Margaret Tilley (71)க்கு, Udineஇன் வார்த்தைகள் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன.

கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்கள் என்று கூறும் Tilley, தயவு செய்து எங்களை விமான நிலையத்திலாவது இறக்கி விட்டு விடுங்கள், வீடு போய்ச் சேர்ந்தால் போதும் என்கிறார்.

Submitted by Chris Joiner

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்