இந்தியாவில் சிக்கியிருக்கும் கனேடியர்கள் நாடு திரும்ப விமானம் தயார்... ஆனால் ஒரு நிபந்தனை!

Report Print Balamanuvelan in கனடா

இந்தியாவில் சிக்கியிருக்கும் கனேடியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கான கட்டணத்தை கனேடியர்கள்தான் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான கட்டணமான 2,900 டொலர்கள், மட்டுமல்லாது, விமான நிலையம் செல்லும் செலவையும் கனேடியர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சிலர் பதற்றமடைந்துள்ளார்கள்.

வழக்கமாக இந்தியாவிலிருந்து கனடா திரும்புவதற்கான கட்டணம் 2,000 டொலர்கள்தான், ஆகவே தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டணமான 2,900 டொலர்கள் மிக அதிகம் என மக்கள் கருதுகிறார்கள்.

நாடு திரும்ப விமானம் கிடைத்தது மகிழ்ச்சிதான், ஆனால் இந்த கட்டணம் எங்களை வம்புக்கிழுப்பதுபோல் உள்ளது என்கிறார் Melissa Chadha என்னும் பெண்.

நிலவும் அசாதாரண சூழலையடுத்து விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அது லாபம் பார்க்கும் நோக்கில் செய்யப்பட்டதல்ல என்றும் கூறியுள்ள இந்திய அரசு, தற்போதைக்கு கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இருப்போருக்கு 5,000 டொலர்கள் கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், விமான நிலையம் செல்வதற்கான கட்டணத்தையும் பயணிகளே செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்தியா மூடப்பட்டிருக்கும் நிலையில், சிறப்பு அனுமதி பெற்று செய்யபட்டுள்ள இந்த வாய்ப்பை கனேடியர்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால், அவர்கள் விமானத்தை தவறவிட நேரிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பினால், உணவு வாங்கக்கூட கையில் பணமில்லை, வீட்டில் உணவு பொருட்களும் இல்லை என்கிறார் Chadha.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்