ஆடம்பரமான மனிதர்களுக்கு விதிமுறைகள் இல்லை! கொரோனாவில் இருந்து மீண்ட கனடிய பிரதமர் மனைவி மீது கடும் விமர்சனம்

Report Print Raju Raju in கனடா
1009Shares

கனடாவில் கொரோனா பரவலை தடுக்க பொலிசார் சில முக்கிய பகுதிகளின் வழிகளை மக்கள் பயன்படுத்துவதில் மாற்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதை கனடிய பிரதமர் மனைவி Sophie மீறியதாக கூறி பிரபல அரசியல் ஆர்வலர் Ezra Levant விமர்சித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க கனடாவின் Quebec பொலிசார் ஒட்டாவா - Gatineau எல்லையை பொதுமக்கள் கடக்கும் விடயத்தில் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளனர்.

மேலும் அவரவர்கள் தங்களின் பிரதான வீடுகளில் தான் இந்த சமயத்தில் தங்க வேண்டுமே தவிர காட்டேஜ் எனப்படும் குடிலில் தங்க நினைக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட பிரபல எழுத்தாளர், அரசியல் ஆர்வலர் போன்ற பன்முகத்தன்மை கொண்ட Ezra Levant, இது போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் கனடிய பிரதமரின் மனைவி Sophie எல்லையை கடந்து சென்று காட்டேஜில் தங்குவதற்கு சென்றுள்ளார்.

இது போன்ற ஆடம்பரமான மனிதர்களுக்கு இந்த விதிமுறைகள் எல்லாம் இல்லை என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

கனடிய பிரதமரின் மனைவி Sophie சமீபத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்