மாஸ்க் பற்றாக்குறையை சமாளிக்க கனேடிய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய வழிமுறை!

Report Print Balamanuvelan in கனடா

கொரோனா தொற்று ஏற்படுத்திவிட்ட மாஸ்க் பற்றாக்குறையை சமாளிக்க, கனேடிய மருத்துவர்கள் குழு ஒன்று புதிய வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவியதையடுத்து, பல நாடுகளில் மாஸ்குகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.

அதனால், மருத்துவ பணியாளர்கள், கொரோனா நோய்த்தொற்று உடையவர்களை சந்திப்பவர்கள் தவிர தவிர வேறு யாரும் மாஸ்க் பயன்படுத்த தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறவேண்டிய ஒரு சூழல் கூட ஏற்பட்டது.

இந்நிலையில், Dr. ஆனந்த் குமார் என்னும் மருத்துவர் தலைமையில், கனடாவின் மனிதோபா பல்கலைக்கழக மருத்துவர்கள் குழு ஒன்று, மாஸ்குகளை கிருமிநீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தும் திட்டம் ஒன்றை சோதனை செய்து வெற்றிபெற்றுள்ளது.

Submitted by Dr. Anand Kumar

அதற்காக தாங்கள் பல வகையில் ஆய்வுகளை மேற்கொண்டதாக் தெரிவிக்கும் ஆனந்த் குமார், ஹைட்ரஜன் பெராக்சைடு ஆவியை பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யும் முறை மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.

ஆனால், இந்த முறை பல நாடுகளில் வழக்கமாக பயன்பாட்டில் இல்லை. ஆகவே, ஆட்டோகிளேவ் எனும் கருவியை பயன்படுத்தி கிருமிநீக்கம் செய்யும் மற்றொரு முறையையும் சோதனை செய்து, அது வெற்றிகரமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது மனிதோபா மருத்துவர்கள் குழு.

இந்த ஆட்டோகிளேவ் என்பது குக்கர் போன்ற ஒரு கருவி. அதில் பயன்படுத்தப்பட்ட மாஸ்குகளை போட்டு, 121 டிகிரி வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரித்து 15 நிமிடங்கள் வைத்திருந்தாலே கிருமிகள் அனைத்தும் இறந்துபோய்விடும்.

இந்த கருவி இல்லாத மருத்துவமனையே உலகில் இருக்கமுடியாது. சில வகை மாஸ்குகள், அதுவும் சிறிது நேரம் மட்டுமே பயன்படுத்தப்பட்ட மாஸ்குகளை, இந்த கருவியின் உதவியால் கிருமிநீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார் Dr. ஆனந்த் குமார்.

இதனால் மாஸ்க் பற்றாக்குறையை சமாளிக்கலாம் என்கிறார் அவர். தாங்கள் ஆய்வுகள் செய்து மாஸ்குகளை இம்முறைகளில் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தாலும், தங்களை பின்பற்ற விரும்புவோர் தாங்களும் சோதனை செய்து அது பயன் தருகிறது என்பதை உறுதி செய்துகொண்டு இம்முறையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.

John Woods/The Canadian Press
Ivanoh Demers/Radio-Canada

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்