வாடகைக்கு பதில் உறவுக்கு அழைத்த வீட்டு உரிமையாளர்: இளம்பெண் எடுத்த முடிவு... கனடாவில் அதிகரிக்கும் சம்பவங்கள்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் வாடகை கொடுக்க முடியாத பெண்களை வாடகைக்கு பதில் பாலுறவுக்கு அழைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன.

2013ஆம் ஆண்டு, St. John's பகுதியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தனர் Judy Whiteம் அவரது காதலரும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது காதலர் அவரை கைவிட்டுச் செல்ல, Judyக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வாடகை கொடுக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டபோது, Judyயைப் பார்த்து கண்ணடித்த அவரது வீட்டு உரிமையாளர், வாடகையில் தள்ளுபடி தருகிறேன், பதிலுக்கு என்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

முதலில் சும்மா வேடிக்கைக்காக அவர் சொல்லுகிறார் என்று எண்ணியிருக்கிறார் Judy. ஆனால், வீட்டு உரிமையாளர் Judyயை விட்டபாடில்லை.

இந்த பிரச்சினை Judyக்கு மட்டுமல்ல... உள்ளூர் அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள், தங்கள் வீட்டு உரிமையாளர் வாடகைக்கு பதில் பாலுறவுக்கு அழைப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, உதவ யாருமற்ற பெண்கள், அதிலும் இளம்பெண்கள், மிகப்பெரிய செல்வந்தர்களாக இருக்கும் வீட்டு உரிமையாளர்களால் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படுவதாக தொண்டு நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

Judyயின் வீட்டு உரிமையாளர் பல நாட்கள் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஒரு நாள் மதியம் ஒரு முடிவெடுத்திருக்கிறார் அவர்.

மறுநாள் காலை பெட்டி படுக்கையுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் Judy.

அவருக்கு போக வேறு இடம் இருந்ததால், அவர் தப்பி விட்டார்...

ஆனால் போக்கிடமற்ற பெண்களின் நிலை?

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்