கனடாவில் வசித்து வந்த நடிகர் மரணம்! உறுதி செய்துள்ள குடும்பத்தார்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பிரபல நடிகர் Bill McFadden தனது 73வது வயதில் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை அவரின் குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜேர்மனியில் பிறந்த Bill McFadden பின்னாளில் அமெரிக்காவில் வளர்ந்து பின்னர் கனடாவுக்கு சென்று அங்கு வசித்து வந்தார்

அவர் திரைப்பட நடிகர், போதகர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டிருந்தார்.

Bill McFadden மரணம் குறித்து அவர் குடும்பத்தார் கூறுகையில், புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டார்.

இந்த சூழலில் Charlottetown நகரில் இருந்த நோய்த்தடுப்பு பராமரிப்பு மையத்தில் Bill தங்கியிருந்த போது எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக அவரின் உயிர் பிரிந்தது.

பலரையும் தனது நகைச்சுவை நடிப்பால் அவர் சிரிக்க வைத்துள்ளார்.

Bill இறந்ததால் நாங்கள் பெரிதும் வருந்துகிறோம், ஆனால் அந்த நல்ல நபரை எப்போதும் நாங்கள் கொண்டாடுவோம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்