கனடாவில் தம்பதி வீட்டில் கைப்பற்றப்பட்ட கட்டுக்கட்டான பணம் மற்றும் போதை பொருட்கள்! புகைப்படத்துடன் பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இளம் வயது தம்பதியின் வீடு மற்றும் அவர்களின் சேமிப்பு கிடங்கில் கட்டுக்கட்டாக பணம், கை துப்பாக்கிகள் மற்றும் போதை மருந்துகள் கைப்பற்றப்பட்ட வழக்கில் இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒன்றாறியோவின் Ancaster நகரை சேர்ந்த 27 வயது பெண் மற்றும் 28 வயது ஆண் வீடு மற்றும் கிடங்கில் போதை பிரிவு பொலிசார் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு இரண்டு கைக்துப்பாக்கிகள், $11,000 மதிப்புள்ள Cocaine போதை மருந்துகள், ஒரு பையில் $166,120 பணம் மற்றும் வீட்டின் இன்னொரு இடத்தில் $4,450 பணம் மற்றும் வெடிமருந்துகளை கண்டெடுத்தனர்.

இதையடுத்து பொலிசார் தம்பதியை கைது செய்த அங்கிருந்த அனைத்தையும் கைப்பற்றினார்கள்.

கைது செய்யப்பட்ட ஆண் கடந்த 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், இந்த சூழலில் கைதான பெண் ஜூலை 8ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரியவந்துள்ளது.

இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்