கனடாவில் காணாமல் போன 22 வயது இளம்பெண் கொலை! மீட்கப்பட்ட சடலம்... வெளியான அவரின் புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போன இளம்பெண் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவத்தில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Yellowknife நகரை சேர்ந்த 22 வயதான இளம்பெண் Breanna Menacho கடந்த புதன்கிழமை காணாமல் போனார்.

இந்நிலையில் Breanna சடலமாக அடுக்குமாடி வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக அவரின் தாய் வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் Devon Larabie (27) என்ற இளைஞனை கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், காணாமல் போனவரின் விசாரணை திடீரென மரணமடைந்தவரின் விசாரணையாக மாறியதை அறிவிப்பது ஒருபோதும் எளிதானது அல்ல.

கைது செய்யப்பட்ட Devon மே 12ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

Breanna-ன் குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவரின் குடும்பத்தாருடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்