கனடாவில் காணாமல் போய் நள்ளிரவில் மீட்கப்பட்ட 16 வயது சிறுமி! மீண்டும் மாயமானவரின் நிலை என்ன? புகைப்படத்துடன் தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் ஏற்கனவே ஒரு முறை காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட 16 வயது சிறுமி மீண்டும் ஒரு மாதமாக மாயமான நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Rachel Croft என்ற 16 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமல் போனதாக பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து Rachel-ன் புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார் பொதுமக்கள் உதவியை நாடினார்கள்.

இந்த சூழலில் கடந்த பிப்ரவரி 11 திகதி நள்ளிரவு 1 மணிக்கு சிறுமி நல்ல நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மீண்டும் Rachel கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ரொரன்ரோவின் St. Clair Avenue West and Keele தெருவில் கடைசியாக காணப்பட்ட நிலையில் மாயமானார்.

ஆனால் Rachel மாயமானது குறித்து மேம் 6ஆம் திகதி தான் புகார் தரப்பட்டது.

இதையடுத்து Rachelம் உயரம், நிறம், அவர் கடைசியாக அணிந்திருந்த உடை உள்ளிட்ட அடையாளங்களை வெளியிட்ட பொலிசார் பொதுமக்கள் உதவியை நாடினார்கள்.

இந்நிலையில் Rachel இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்