என்னுடன் வந்து காரில் ஏறு! கனடாவில் சாலையில் நின்ற 12 வயது சிறுமியிடம் கவரும் வகையில் பேசி கடத்த முயன்ற மர்ம நபர்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் 12 வயது சிறுமியிடம் கவரும் வகையில் பேசி அவரை கடத்தி செல்ல முயன்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vancouver தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் மாலை 3.30 மணியளவில் 12 வயது சாலையில் மிதிவண்டி ஓட்டி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு காரில் நபர் ஒருவர் வந்த நிலையில் சிறுமி அருகில் சென்று அவரை கவரும் வகையில் பேசியுள்ளான்.

பின்னர் வா என்னுடம் காரில் ஏறு என கூறியுள்ளான், ஆனால் சிறுமி அங்கிருந்து உடனடியாக கிளம்பி வீட்டுக்கு சென்று நடந்ததை தாயாரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து தாயார் பொலிசில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் விசாரணையை தொடங்கினார்கள்.

பொலிசார் கூறுகையில், இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டோம் என கூறியுள்ளனர்.

ஆனால் குற்றவாளி கைது செய்யப்பட்டு விட்டாரா என்ற விபரத்தை பொலிசார் தெரிவிக்கவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்