கனடாவில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன 19 வயது இளம்பெண் கண்டுபிடிப்பு! புகைப்படத்துடன் வெளியான தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் ஐந்து மாதங்களாக காணாமல் போயிருந்த இளம்பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

Xenia Martins என்ற 19 வயது இளம்பெண் கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் Jane St & Eglinton Ave W பகுதியில் காணப்பட்டார்.

5 அடி 5 அங்குலம் உயரமும் ஒல்லியான உடல் வாகும் கொண்ட Xeniaவின் கண்கள் மற்றும் தலை முடியின் நிறம் பழுப்பு என தெரிவிக்கப்பட்டது.

மேலும் தனது கைகள் மற்றும் வயிற்றில் டாட்டூ குத்தியிருப்பார் எனவும் அவர் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐந்து மாதங்களாக மாயமான Xenia கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் வியாழன் அன்று மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்