கனடிய நகரின் புதிய கோடீஸ்வரன் நான்! திடீரென அடித்த அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ள நபர்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் லொட்டரியில் $1 மில்லியன் பரிசை வென்ற நபர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

Calgary நகரில் வசிப்பவர் Nazar Yousif. இவருக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

முதலில் இதை நம்பாத இவர் 10 முறை தனக்கு பரிசு விழுந்ததா என செல்போன் செயலியில் பார்த்து உறுதி செய்து கொண்டுள்ளார்.

Nazar கூறுகையில், எனக்கு எப்போதும் பரிசு விழுந்ததே கிடையாது, என்னால் இதை நம்பவே முடியவில்லை.

நகரின் புதிய கோடீஸ்வரன் ஆனதில் மகிழ்ச்சி,தற்போது கொரோனா காரணமாக லொட்டரி நிறுவனத்தின் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

ஆனாலும் நான் பரிசு பணத்தை பெறுவதற்கு லொட்டரி நிறுவன அதிகாரிகள் உதவினார்கள்.

பரிசு பணத்தில் புதிய வீடு வாங்க ஆலோசித்து வருகிறேன், பரிசு விழுந்ததை நம்பமுடியாமல் நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்