ரொரன்ரோவில் உள்ள ஒரு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்! நடந்தது என்ன?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் தீவிபத்து நடந்த இடத்தில் இருந்து ஒரு சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.

கனடாவின் ரொரன்ரோவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ரொரன்ரோவின் Scarboroughல் உள்ள Midland Avenue and Eglinton Avenue East பகுதியில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்ற நிலையில் அங்கிருந்து சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இது சிறிய தீவிபத்தா அல்லது பெரிய விபத்தா என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த நபர் சம்பவ இடத்தில் எவ்வளவு நேரம் சடலமாக கிடந்தார் என்ற விபரமும் இன்னும் வெளியாகவில்லை.

இந்த தீவிபத்து தொடர்பில் மேலதிக தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்