ரொரன்ரோவில் அடுக்குமாடி வீட்டின் ஒன்பதாவது மாடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! உயிரிழந்த நபரின் முதல் புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு பேரை நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

ரொரனரோவின் Scarboroughல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு கடந்த ஞாயிறு மாலை நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்தார்.

பின்னர் ஒன்பதாவது மாடியில் இருந்த இரண்டு பேரை அவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடியுள்ளார். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் Shawn Williams என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மற்றொரு நபரின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.

ரொரன்ரோவில் இந்தாண்டு கொலை செய்யப்பட்ட 28 வது நபர் Shawn என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 30 வயதான குற்றவாளி அவராகவே பொலிசில் வந்து சரணமடைந்துள்ளார். அவரை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் இந்த கொலை சம்பவத்தில் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்