அழகிய இளம்பெண்ணை வாளால் குத்திக்கொன்ற இளைஞன்... தீவிரவாத செயலாக மாற்றப்பட்ட குற்றச்சாட்டு: பின்னணி!

Report Print Balamanuvelan in கனடா

மசாஜ் பார்லர் ஒன்றில் பணிபுரிந்த அழகிய இளம்பெண் ஒருவரை இளைஞன் ஒருவன் வாளால் குத்திக்கொன்ற வழக்கு, கொலைக்குற்றச்சாட்டிலிருந்து தீவிரவாத வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

பாலியல் இன்பம் கொடுக்கும் மஸாஜ் பார்லர் ஒன்றில் பணிபுரிந்தவர் Ashley Arzaga (24). ரொரன்றோவைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவன் Ashleyயை வாளால் குத்திக்கொன்றான்.

பின்னர் அந்த பார்லர் உரிமையாளராகிய பெண்ணை அவன் தாக்க, உயிர் தப்ப போராடிய அவர், அந்த இளைஞனை தடுக்க முயன்றபோது அவரது விரல் வெட்டுப்பட்டிருக்கிறது.

விரலை இழந்து இரத்தம் சொட்டிய நிலையிலும், அந்த பெண் அந்த இளைஞனிடம் இருந்து வாளைப் பிடுங்கி அவனைக் குத்திவிட்டு, பொலிசார் வரும் வரை அவனைப் பிடித்து வைத்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், அந்த இளைஞனுக்கு Incel என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தான் மேலும் பல பெண்களை கொல்ல திட்டம் தீட்டியிருந்ததாக அவன் பொலிசாரிடம் வாக்குமூலமும் அளித்துள்ளான்.

பெண்களை இயல்பாக காதலிக்கவோ, பெண்களுடன் சாதாரணமாக பழகவோ, பாலுறவு வைத்துக்கொள்ளவோ இயலாததால், தங்கள் இயலாமையை பெண்கள் மீதான வெறுப்பாக வெளிப்படுத்தும் ஒரு கூட்டம் ஆண்கள் கொண்ட அமைப்புதான் Incel.

ரொரன்றோவில் ஏற்கனவே Alek Minassian என்னும் Incel அமைப்பைச் சேர்ந்த ஒரு இளைஞன் வேன் ஒன்றைக்கொண்டு மோதி 10 பேரைக் கொன்றிருந்தான்.

ஆக, Ashleyயைக் கொன்றவனுக்கும் Incel அமைப்போடு தொடர்பு இருப்பதை பொலிசார் கண்டறிந்துள்ளதால், அவன் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்