வெளிநாடு ஒன்றில் கைது செய்யப்பட்ட கனடிய பாதிரியார்! அரசாங்கம் விதித்த தடையை மீறியதால் நடவடிக்கை

Report Print Raju Raju in கனடா

கனடாவை சேர்ந்த பாதிரியார் மியான்மரில் அரசாங்கம் விதித்த தடையை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மியான்மரில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுக்கூட்டங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் அந்த தடையை மீறி கனடாவை சேர்ந்த பாதிரியார் டேவிட் லா கடந்த மாதம் 7-ஆம் திகதி பிராா்த்தனைக் கூட்டம் நடத்தியதாக அவா் மீது நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து பாதிரியாா் டேவிட் லாவை மியான்மர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதையடுத்து, அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

டேவிட் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்