கொரோனா வந்தாலும் வந்தது, மாஸ்க் அணிவோரின் எண்ணிக்கையும் எக்கச்சக்கமாக பெருகிவிட்டது.
மாஸ்க் அணிந்துவிட்டு அதை வீசியெறிவதால் குப்பையும் பெருகிவிட்டது.
ஏற்கனவே மாசு உலகில் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்க, கொரோனாவால் மறு சுழற்சி செய்ய இயலாத மாஸ்க் குப்பை இன்னும் மண்ணை அதிக அளவில் மாசுபடுத்தத்துவங்கிவிட்டது.
இந்த பிரச்சினையை கொஞ்சம் சமாளிக்கும் வகையில் ஒரு கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர் கனேடிய ஆய்வாளர்கள் சிலர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக குழு ஒன்று பசுமை மாஸ்க் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
அதாவது இந்த மாஸ்க் மண்ணின் போட்டால் மட்கிப்போகக்கூடியதாகும் (biodegradable). The Canadian-Mask அல்லது Can-Mask என்று அழைக்கப்படும் இந்த மாஸ்குகளில் மென்மையான மரங்களான பைன் போன்ற மரங்களின் இழைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வாளர்கள் விரைவில் கனடா சுகாதார துறையின் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க இருக்கும் நிலையில், தரமானவை என்றும் சான்றிதழ் கிடைத்துவிட்டால் அப்புறம் மக்களால் வாங்க இயலும் விலையில் பெருமளவில் இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மாஸ்குகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.