கனடாவிலும் ஒரு பொலிஸ் அராஜக வீடியோ... கனேடிய பிரதமர் அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் பூர்வக்குடியின தலைவர் ஒருவரை பொலிசார் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில், தன்னை அந்த வீடியோ அதிர்ச்சியடைய செய்துள்ளதாக கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

காலாவதியான நம்பர் பிளேட்டுடன் பயணித்ததாக பூர்வக்குடியின தலைவரான Allan Adamக்கும் பொலிசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் இறுதியில் Adamஐ கைது செய்யும் முயற்சியின்போது பொலிசார் அவரை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், பொலிசார் Adamஐ தாக்கும் வீடியோவும், முகத்திலிருந்து இரத்தம் வடியும் அவரது புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

அந்த வீடியோவைப் பார்த்த பல அரசியல்வாதிகள், Adam தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோ தன்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு பல சீரியஸ் கேள்விகள் எழுகின்றன என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், கேள்விகளுக்கு பதில் கிடைக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என்று கூறியுள்ள ட்ரூடோ, ஏராளமான கருப்பின கனேடியர்களும் பூர்வக்குடியின மக்களும்பொலிசார் தங்களை பாதுகாப்பவர்கள் என கருதுவதில்லை, இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, அரசாங்கங்கள் என்னும் முறையில் நாம் அதை மாற்றவேண்டும் என்றார்.

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் வெள்ளையின பொலிசாரால் கொல்லப்பட்டதையடுத்து உலகமெங்கும் இனவெறிக்கெதிரான போராட்டங்கள் வெடித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்