கனடாவில் இரவு நேரத்தில் காணாமல் போயுள்ள பெண்! புகைப்படத்துடன் அவர் குறித்து வெளிவந்த தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Yellowknife நகரை சேர்ந்த 40 வயதான Tina Black கடந்த புதன்கிழமை இரவு 10.15 மணிக்கு காணாமல் போயுள்ளார்.

இது குறித்து பொலிசார் மேலும் கூறுகையில், Tina கருப்பு நிற தலைமுடியையும், பழுப்பு நிற கண்களையும் கொண்டவர்.

அவர் ஐந்து அடி ஐந்து அங்குலம் உயரம் கொண்டதோடு 130 பவுண்ட் எடை கொண்டவராக இருப்பார்.

Tina-வை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடுகிறோம்.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் Yellowknife பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என அதற்கான தொலைபேசி எண்களையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்