கனடாவில் சிறார் ஆபாச படங்கள் தொடர்பான குற்றத்தில் சிக்கிய நபர்! புகைப்படத்துடன் பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் முன்னாள் Simcoe North Liberal கட்சியின் வேட்பாளர் Gerry Hawes மீது சிறார் ஆபாச படங்கள் தொடர்பான குற்றம் செய்ததாக வழக்குப்பதியப்பட்டுள்ளது.

சிறார் ஆபாச படங்களை வைத்திருத்தல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்றாறியோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Gerry கடந்த 2019 கூட்டாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

அவர் தற்போது கட்சியில் எந்தவொரு பதவி மற்றும் பொறுப்பில் இல்லை என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக Gerry வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி ஒன்றாறியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்