என்னை மன்னித்துவிடுங்கள்... இறந்துகிடந்த இளம்பெண்ணின் அருகிலிருந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் இளம்பெண் ஒருவர் தனது அறையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

Sara Hegazy (30), எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கை ஆதரவு சமூக ஆர்வலர் ஆவார்.

எகிப்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது ஓரினச்சேர்க்கையாளர் ஆதரவு வானவில் கொடியை உயர்த்திக் காட்டியதற்காக கைது செய்யப்பட்டார் Sara.

எகிப்தில் இத்தகைய குற்றங்களுக்காக கைது செய்யப்படுவோர், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்களா என அறிவதற்காக அந்தரங்க உறுப்புகள் சோதனை செய்யப்படுவதுண்டு.

மூன்று மாதங்கள் சிறையில் இருந்த Sara, அவமதிப்பின் காரணமாக தற்கொலைக்கு முயன்றார்.

Humena via Creative Commons

பின்னர் விடுதலை செய்யப்பட்டபின், கனடாவில் புகலிடம் கோரி தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் அருகில் அவர் கைப்பட எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், ’என் உடன் பிறந்தவர்களுக்கு, விடுதலையைதேட முயன்று தோற்றுப்போனேன்,என்னை மன்னியுங்கள்.

என் நண்பர்களுக்கு, வாழ்க்கைப் பயணம் கடினமாக இருந்தது, அதை எதிர்க்கும் அளவுக்கு எனக்கு பலமில்லை, என்னை மன்னியுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தின் முடிவில், ’உலகத்திற்கு, உலகமே, நீ மிகவும் கொடுமையானவன், என்றாலும் உன்னை மன்னிக்கிறேன்’ என்று எழுதியுள்ளார் Sara.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்