ரொரன்ரோவில் காணாமல் போன 26 வயது இளம்பெண்! புகைப்படத்துடன் அவர் குறித்து வெளிவந்த தகவல்

Report Print Raju Raju in கனடா

ரொரன்ரோவில் இளம்பெண்ணொருவர் காணாமல் போயுள்ள நிலையில் அது தொடர்பில் பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ள்னர்.

கனடாவின் ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் 26 வயதான Amritpal 'Amber' Panesar என்ற இளம்பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Amritpal 'Amber' Panesar கடைசியாக 14ஆம் திகதி பகல் 2 மணிக்கு Lawrence Av W + Caledonia Rd பகுதியில் காணப்பட்டுள்ளார்.

இதன்பின்னரே அவர் மாயமாகியுள்ளார்.

5 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட Amritpal 'Amber' Panesarன் தலைமுடி கருப்பு நிறத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன அன்று அவர் கருப்பு நிற ஷார்ட்ஸ், கருப்பு நிற சட்டை அணிந்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்