கனவை நினைவாக்குவோம்! கனடாவில் திடீர் கோடீஸ்வரர்கள் ஆன இரண்டு நண்பர்கள்... சுவாரசிய பின்னணி

Report Print Raju Raju in கனடா

கனடாவில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு நண்பர்களுக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ள நிலையில் அதை சரிபாதியாக பிரித்து கொள்ளவுள்ளனர்.

Brandon நகரை சேர்ந்த நண்பர்கள் David Morley மற்றும் Jean Riviere ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

இருவரும் கடந்த 9 மாதங்களாக லொட்டரி விளையாட்டில் இணைந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் David மற்றும் Jean வாங்கிய லொட்டரிக்கு $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

ஓன்லைன் மூலம் பரிசு விழுந்துள்ளதை David தான் உறுதி செய்தார்.

இது குறித்து David கூறுகையில், பரிசு விழுந்தவுடன் Jean-க்கு போன் செய்து அந்த மகிழ்ச்சியான விடயத்தை கூறினேன்.

எங்களால் இதை நம்பவே முடியவில்லை, இருவருக்கும் சில கடன்கள் உள்ளது, அதை அடைத்த பின்னர் எங்கள் கனவு விடயங்களை நிஜத்தில் மேற்கொண்டு நினைவாக்குவோம் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்