கொரோனாவால் கனடாவிலிருக்கும் என் மகளுக்கு என்ன ஆகுமோ என பயப்படுகிறேன்... இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்!

Report Print Balamanuvelan in கனடா

அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட முன்னாள் உளவாளிக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான இலங்கையர் ஒருவர், கனடாவிலிருக்கும் தன் மகளுக்கு கொரோனாவால் ஏதாவது ஆபத்து நேரிடுமோ என அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனுக்கு புகலிடம் அளித்ததால் ஹொங்ஹொங்கில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களில் Supun Thilina Kellapatha (36)குடும்பமும் அடக்கம்.

Kellapathaவின் முன்னாள் காதலியான Vanessa Rodelக்கும் அவருக்கும் Kellapathaவுக்கும் பிறந்த மகளான Keanaவுக்கும் கனடாவில் புகலிடம் அளிக்கப்பட, அவர்கள் இருவரும் இப்போது கனடாவில் வாழ்கிறார்கள்.

Kellapatha, அவரது மனைவி Nadeeka Dilrukshi Nonis (37) மற்றும் அவர்களது பிள்ளைகளான Sethumdi மற்றும் Dinath ஆகியோர் இன்னமும் ஹொங்ஹொங்கிலேயே அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

கடனாவில் புகலிடம் கோரி அவர்கள் அளித்துள்ள விண்ணப்பத்திற்கு இதுவரை பதிலில்லை. இந்நிலையில், தனது குழந்தைகள் அனைவரையும் ஒரே இடத்தில் வளர்க்க ஆசைப்படுவதாக தெரிவிக்கும் Kellapatha, கனடாவில் கொரோனா பரவல் இருக்கும் நிலையில், கொரோனாவால் அங்கிருக்கும் தன் மகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என தான் அஞ்சுவதாக தெரிவிக்கிறார்.

Photo: Raquel Carvalho

அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால், அவர்களை கவனித்துக்கொள்ள அங்கே உறவினர்கள் யாரும் இல்லை என்கிறார் அவர்.

நாங்கள் கனடாவிலிருந்தால் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்போம் என்று கூறும் அவரது மனைவியான Nonis, Sethumdi தன் சகோதரி Keanaவை ரொம்ப மிஸ் பண்ணுவதாக் தெரிவிக்கிறார்.

அவர்களது சட்டத்தரணியான Tibbo, கடந்த ஆண்டு ஹொங்ஹொங்கில் நடந்த போராட்டங்களால் இந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவிக்கிறார்.

அதுவும் சீனா, ஹொங்ஹொங் மக்களின் உரிமைகளை பறித்துக்கொள்ளும் சட்டத்தை நிறைவேற்றியுள்ள நிலையில் அவர்களுக்கு உண்மையாகவே அங்கிருக்கும் சூழல் நன்றாக இல்லை என்கிறார் அவர்.

Raquel Carvalho

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்