கனடாவில் போன் மூலம் மக்களிடம் பணம் கேட்டு ஏமாற்றும் மோசடி பேர்வழிகள்! பொலிசார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவின் Halifax நகரில் உள்ள மக்களிடம் பணம் கேட்டு மோசடி போன் கால்கள் வருவது தொடர்பாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Halifax பொலிசார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், பொலிஸ் அதிகாரிகள், சேவை கனடா அல்லது கனடா வருவாய் ஏஜென்சியின் பிரதிநிதிகள் என்று பொய்யாக கூறி பொதுமக்களுக்கு மோசடி பேர்வழிகள் போன் செய்வது அதிகரித்துள்ளது.

போனில் பேசும் மோசடி நபர்கள், கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக பரிசு அட்டைகள் அல்லது பிட்காயின் பயன்படுத்தி பணம் செலுத்துமாறு பொதுமக்களை அறிவுறுத்துகிறார்கள்.

பொலிசாரும், அரசு பிரதிநிதிகளும் இது போல பணம் கேட்டு பொதுமக்களை நாடமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது போன்ற மோசடி போன் கால்கள் மூலம் பணத்தை இழந்த நபர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்